மும்பையில் கொரோனா மருத்துவமனையில் தீ விபத்து.. 10 பேர் உயிரிழந்த சோகம்!

The death toll from a sudden fire at a private corona hospital in Mumbai has risen to 10. Twenty-two fire engines were rushed.

மும்பையில் உள்ள தனியார் கொரோனா மருத்துவமனையில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் நாள் ஒன்றுக்கு 35,000-க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், அம்மாநிலத்தில் விதித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. அந்தவகையில், ட்ரீம்ஸ் மால் சன்ரைஸ் மருத்துவமனை கொரோனாவால் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அந்த மருத்துவமனையில் 70-க்கும் மேற்பட்டோருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

அப்பொழுது திடீரென இரவு 12:30 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீயை அணைக்க 22 வாகனங்கள் மருத்துவமனை வளாகத்திற்குள் நுழைந்தது. தீ விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் இதுவரை தெரிவிக்கவில்லை. இந்த தீ விபத்தில் சிக்கி இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும், மருத்துவமனையில் இருந்த அனைத்து நோயாளிகளையும் உடனடியாக வேறு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். தீயை அணைக்கும் பணியிலும், மருத்துவமனையில் இருந்தவர்களை மீட்கும் பணியில் தீயணைப்பு துறையினரும், காவல்துறையினரும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.