சக்திவாய்ந்த வெடிபொருட்கள் ஏற்றி சென்ற லாரி வெடித்து சிதறியதில் 10 பேர் உயிரிழப்பு!

A vehicle carrying dynamite explosives exploded in Shivamogga district of Karnataka last night. Blast is caused an earthquake of 15 to 20kms.

கர்நாடக மாநிலம் ஷிவமோகா மாவட்டத்தில் கல்குவாரிக்கு வெடிபொருள் ஏற்றி சென்ற லாரி வெடித்து சிதறியதில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

கர்நாடகா மாநிலம் ஷிவமோகா மாவட்டத்தில் டைனமைட் வகையான வெடிபொருளை ஏற்றி சென்ற வாகனம் நேற்று இரவு வெடித்து சிதறியது. இந்த வெடி விபத்தால் 15 முதல் 20 கிலோ மீட்டர் வரை நில அதிர்வு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் பல வீடுகளின் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து சிதறியது.

மேலும், இந்த வெடி விபத்தில் சிக்கி 10 பேர் உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கிறது. உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சாலைகளில் ஏற்பட்ட விரிசல் காரணமாக மக்கள் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது என அச்சமடைந்தனர். இதுகுறித்து தகவறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மாவட்ட ஆட்சியர் சிவக்குமார், அங்கு ஆய்வுகளை மேற்கொண்டார்.