இந்தியாவில் இந்த மாவட்டத்தில் 107 மொழிகள் பேசப்படுகின்றன..!

இந்தியாவில் பெங்களூரில் தான் 107 மொழிகள் பேசப்படும் மாவட்டமாகும்.
கடந்த 2011-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பை இரண்டு கல்வியாளர்கள் சமீபத்தில் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வில் இந்தியாவில் அதிக மொழிகள் பேசப்படும் ஒரே மாவட்டம் பெங்களூரு என்று தெரியவந்துள்ளது. இந்த ஆய்வை ப்ரூக்கிங்ஸ் இன்ஸ்டிடியூட்டில் மூத்த சக ஊழியரான ஷாமிகா ரவி மற்றும் இந்திய புள்ளியியல் நிறுவனத்தில் பொருளாதாரப் பேராசிரியர் முடித் கபூர் நடத்தினர்.
அவர்களின் கருத்துப்படி, பெங்களூருவில் குறைந்தபட்சம் 107 மொழிகள் பேசப்படுகின்றன. இதில் 22 பழங்குடியின மொழிகள், 84 பழங்குடியின அல்லாத மொழிகள் உள்ளன. 107 மொழிகளில், 44.5% மக்கள் கன்னடம், 15% தமிழ், 14% தெலுங்கு, 12% உருது, 6% இந்தி மற்றும் 3% மலையாளம் பேசுகிறார்கள்.
நாகாலாந்தின் திமாபூர் மற்றும் அசாமின் சோனித்பூர் ஆகியவை 100 க்கும் மேற்பட்ட மொழிகள் பேசப்படும் மற்ற மாவட்டங்களாகும். குறைவான மொழிகள் பேசும் மாவட்டங்களாக யானம் (புதுச்சேரி), கைமூர் (பபுவா, பீகார்), கவுஷாம்பி மற்றும் கான்பூர் தேஹத் (உத்தரப் பிரதேசம்) மற்றும் அரியலூர் (தமிழ்நாடு) ஆகியவை அடங்கும். இந்த மாவட்டங்களில் 20-க்கும் குறைவான மொழிகள் பேசப்படுகின்றன.
Just look at the number of languages spoken across districts in India! Bangalore has the highest = 107#CelebrateDiversity #KnowIndia pic.twitter.com/YNX7LNOlfp
— Prof Shamika Ravi (@ShamikaRavi) September 2, 2021
லேட்டஸ்ட் செய்திகள்
ஆரம்பத்தில் திணறிய மும்பை.. வெளுத்து வாஙகிய சூர்ய குமார்.! டெல்லி அணிக்கு இதுதான் டார்கெட்.!
May 21, 2025
175 பில்லியன் டாலரில் அமெரிக்காவை பாதுகாக்க `கோல்டன் டோம்’.., டிரம்ப் அறிவித்த திட்டம் என்ன?
May 21, 2025