சூடானில் இருந்து ஜித்தா வந்தடைந்த 1100 இந்தியர்கள்.!

சூடானில் இருந்து மீட்கப்பட்ட சுமார் 1100 இந்தியர்கள் சவுதி அரேபியாவின் ஜித்தாவிற்கு வந்தடைந்தனர் என வெளியுறவுத்துறை இணை அமைச்சர் தகவல்.

OperationKaveri

சூடானில் இருந்து மீட்கப்பட்ட சுமார் 1100 இந்தியர்கள் சவுதி அரேபியாவின் ஜித்தாவிற்கு வந்தடைந்தனர் என வெளியுறவுத்துறை இணை அமைச்சர் தகவல்.

சூடானில் ராணுவத்துக்கும், துணை ராணுவத்தினருக்கும் நடக்கும் உள்நாட்டு போர் உலகையே பதற்றமடைய வைத்துள்ள்ளது. இதுவரை இந்த துப்பாக்கி சூடு, குண்டுவெடிப்பு நிகழ்வுகளில் சிக்கி 500க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.

இந்நிலையில், உள்நாட்டு போர் நடைபெறுவதால் அங்கு உணவு, இருப்பிடம் , மருத்துவ சேவைகள் என அடிப்படை தேவைகளுக்கு கூட மக்கள் மிகவும் கஷ்டப்படுகின்றனர். இதனால், அங்கு சிக்கி தவித்து வரும் இந்திய மக்களை மீட்க இந்திய அரசு, சவூதி அரேபிய அரசுடன் இணைந்து “ஆப்ரேசன் காவேரி” எனும் திட்டம் மூலம் சூடானில் சிக்கி தவிக்கும் இந்தியவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தற்போது, சூடானில் இருந்து மீட்கப்பட்ட சுமார் 1100 இந்தியர்கள் சவுதி அரேபியாவின் ஜித்தாவிற்கு வந்தடைந்துள்ளனர் என்று வெளியுறவுத்துறை இணை அமைச்சர் ட்வீட் செய்துள்ளார். மேலும், அவர்களுடன் உறையாடிய புகைப்படங்களையும் வெளியிட்டு இருக்கிறார்.

unknown node