இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 12,516 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.இறப்பு எண்ணிக்கை501ஆக பதிவாகியுள்ளது.இதுவரையிலும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,44,14,186 ஆக உள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 12,516 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.இது நேற்றைய பாதிப்பை விட 500 குறைவு.கொரோனாவால் நாடு முழுவதும் இதுவரை 3,44,14,186 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் இறப்பு எண்ணிக்கை 501 ஆக பதிவாகியுள்ளது. இதுவரை இந்தியாவில் 4,62,690 பேர் உயிரிழந்துள்ளனர்.
தொற்றில் இருந்து ஒரே நாளில் 13,155 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை இந்தியாவில் மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 3,38,14,080 ஆக உயர்ந்துள்ளது.குணமடைந்தோர் விகிதம் தற்போது 98.26% ஆக அதிகரிப்பு.
இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 1,37,416 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.267 நாட்களுக்கு பிறகு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை தற்போது குறைந்துள்ளது.
நாடு முழுவதும் இதுவரை 1,10,79,51,225 பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.கடந்த 24 மணி நேரத்தில் 53,81,889 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.