கடந்த ஒரே நாளில் கொரோனாவிலிருந்து 13,204 பேர் டிஸ்சார்ஜ்;108.47 கோடி பேருக்கு தடுப்பூசி!

13,204 discharged from Corona in last one day; 108.47 crore vaccinated!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 11,451 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.இறப்பு எண்ணிக்கை 266  ஆக பதிவாகியுள்ளது, இதுவரையிலும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,43,66,987 ஆக உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 11,451 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.இது நேற்றைய பாதிப்பை விட 600 அதிகம்.கொரோனாவால் நாடு முழுவதும் இதுவரை 3,43,66,987 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் இறப்பு எண்ணிக்கை 266 ஆக பதிவாகியுள்ளது. இதுவரை இந்தியாவில் 4,61,057 பேர் உயிரிழந்துள்ளனர்.

தொற்றில் இருந்து ஒரே நாளில் 13,204 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை இந்தியாவில் மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 3,37,63,104 ஆக உயர்ந்துள்ளது.குணமடைந்தோர் விகிதம் தற்போது 98.24% ஆக அதிகரிப்பு.

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 1,42,826 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.262 நாட்களுக்கு பிறகு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.

நாடு முழுவதும் இதுவரை 1,08,47,23,042 பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.