இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,32,788 பேருக்கு தொற்று உறுதி...! மீண்டும் 3 ஆயிரத்தை கடந்த பலி எண்ணிக்கை..!

In India, 1,32,788 lakh people have been infected with corona in the last 24 hours. The death toll has risen to 3,207, bringing the total number of casualties so far to 2,83,07,832.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,32,788 லட்சம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இறப்பு எண்ணிக்கை 3,207 ஆக பதிவாகியுள்ளது, இதுவரையிலும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,83,07,832 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த கடந்த 24 மணி நேரத்தில் 1,32,788 பேர் பாதிக்கப்ட்டுள்ளனர். கடந்த 24 ஆம் தேதி முதல் தொற்று எண்ணிக்கை 2 லட்சத்துக்கு கீழ் இறங்கியுள்ளது.

கொரோனாவால் நாடு முழுவதும் இதுவரை  2,83,07,832 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் இறப்பு எண்ணிக்கை 3,207ஆக கடந்த 24 மணி நேரத்தில் பதிவாகியுள்ளது, இதுவரை இந்தியாவில் 3,35,102 பேர் உயிரிழந்துள்ளனர்.

தொற்றில் இருந்து ஒரே நாளில் 2,31,456பேர் குணமடைந்துள்ளனர். பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையை விட குணமடைந்ததோர் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியுள்ளது.

இதுவரை இந்தியாவில் மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 2,61,79,085ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 17,93,645 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நாட்டில் இதுவரை 21,85,46,667 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.