14 வயது சிறுமி வன்கொடுமை.. அண்ணன் உட்பட 4 பேர் கைது..!

மைனர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பம் செய்த வழக்கில் சகோதரர் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ராஜஸ்தானின் நாகூர் மாவட்டத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை 14 வயது சிறுமிக்கு அஜ்மீரில் உள்ள சனனா மருத்துவமனையில் குழந்தை பிறந்ததை தொடர்ந்து, சிறுமியின் பிரசவம் குறித்து மருத்துவமனை அதிகாரிகள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
இதனையடுத்து, நடத்தப்பட்ட விசாரணையில், சிறுமியின் கிராமத்தைச் சேர்ந்த மூன்று பேருடன் அவரது சகோதரர் பலமுறை தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக அந்த சிறுமி கூறினார். இந்த விஷயத்தை சிறுமியின் உறவினர்கள் மறைத்து வைத்தாக போலீசார் தெரிவித்தனர்.
சிறுமியின் வாக்குமூலம் அடிப்படையில் போக்ஸோ சட்டத்தின் கீழ் அவரது சகோதரர் மற்றும் மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். டி.என்.ஏ சோதனைக்குப் பிறகு வேறு நடவடிக்கைகளை எடுப்பதாக போலீசார் தெரிவித்தனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் : 58 ஆண்டுகள்.., வரலாற்று வெற்றியைப் பதிவு செய்த இந்தியா.!
July 7, 2025
அரோகரா.. அரோகரா.. திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கோலாகலமாக நடைபெற்றது மகா கும்பாபிஷேகம்..!
July 7, 2025