மத்தியப் பிரதேசத்தின் ரேவாவில் பேருந்து ஒன்று டிரக் மீது மோதியதில் 15 பேர் உயிரிழந்தனர் மற்றும் 40 பேர் காயமடைந்துள்ளனர்.
சுமார் 100 பேருடன் பேருந்து, உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூருக்குச் சென்று கொண்டிருந்தபோது, நேற்று இரவு ரேவாவில் உள்ள சுஹாகி பஹாரி அருகே நிறுத்தப்பட்டிருந்த டிரக் மீது மோதியது.
காயமடைந்தவர்கள் சுஹாகியில் உள்ள மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர், மேலும் பலத்த காயமடைந்தவர்கள் ரேவாவின் சஞ்சய் காந்தி நினைவு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
காவல்துறை கண்காணிப்பாளர் நவ்நீத் பாசின் கூறுகையில், பேருந்தில் பயணித்தவர்களில் பெரும்பாலோர் உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள், அவர்கள் மத்தியப் பிரதேசத்தின் கட்னியில் இருந்து தீபாவளி பண்டிகைக்காக வீட்டிற்குச் சென்றபோது இந்த விபத்து நடந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.