கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 1,619 பேர் உயிரிழப்பு...! 2,73,810 பேருக்கு கொரோனா பாதிப்பு...!

In India, 2,73,810 people have been infected with the corona virus in the last 24 hours.

இந்தியாவில் கொரோனா வைரஸ் காரணமாக  கடந்த 24 மணி நேரத்தில் 2,73,810 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் காரணமாக  கடந்த 24 மணி நேரத்தில் 2,73,810 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதனால், இதுவரை மொத்தமாக பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை 1,50,61,919 உயர்ந்துள்ளது. தொடர்ந்து 4-வது நாளாக கொரோனா வைரஸ் பாதிப்பு 2-லட்சத்தை தாண்டியுள்ளது. இந்தியாவில் கொரனோ வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருபவர்கள் எண்ணிக்கை 19,29,329 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் மொத்தம் 1,619 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,78,769 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 1,44,178 பேர் கொரோனா  பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 1,29,53,821 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.