#BigNews:குஜராத் கொரோனா மருத்துவமனையில் தீ விபத்து 18 பேர் உயிரிழப்பு

குஜராத் பருச் நல மருத்துவமனையில் சனிக்கிழமை அதிகாலை 1 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் கொரோனா க்கு சிகிச்சை பெற்றுவந்தவர்கள் 18 பேர் உயிரிழந்துள்ளனர்.
இங்கு 70 பேர் கொரோனா சிகிச்சைக்காக இந்த நான்கு மாடி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், அவர்களில் 24 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர்.தீ மற்றும் அதன் விளைவாக ஏற்பட்ட புகை காரணமாக நோயாளிகள் இறந்தனர் என்று பருச் காவல் கண்காணிப்பாளர் ராஜேந்திரசின் சுதாசமா தெரிவித்தார்.
தப்பிப்பிழைத்த அனைவரும், உள்ளூர்வாசிகள் மற்றும் தீயணைப்பு வீரர்களால் மீட்கப்பட்டனர், மீட்கப்பட்ட அனைவரும் அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
“காலை 6.30 மணியளவில்,இறந்தவர்களின் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது. தீ விபத்து ஏற்பட்ட உடனேயே, 12 இறப்புகள் உறுதி செய்யப்பட்டன” என்று ஒரு போலீஸ் அதிகாரி பி.டி.ஐ யிடம் தெரிவித்தார்.
லேட்டஸ்ட் செய்திகள்
ஜூலை 19ஆம் தேதி நாடாளுமன்ற அனைத்துக் கட்சி கூட்டம்.!
July 3, 2025