பீர் பாட்டிலால் கான்ஸ்டபிளை தாக்கிய 19 வயது இளைஞன் கைது..!

A 19-year-old man has been arrested for allegedly assaulting a constable with a beer bottle in Mumbai. Sheikh has been prosecuted.

மும்பையில் கான்ஸ்டபிளை பீர் பாட்டிலால் தாக்கிய 19 வயது இளைஞன் கைது செய்யப்பட்டார்.

கடந்த செவ்வாய்க்கிழமை அதிகாலை கான்ஸ்டபிள் வினோத் மத்ரே (50) புறநகர் கோவாண்டியின் டாடா நகர் பகுதியில் பைக்கில் வேகமாக வந்த மூன்று பேரைக் பார்த்த்துள்ளார். அவர்களில் இருவர் கூர்மையான கத்தி வைத்திருந்தனர். உடனே ரோந்து பணியில் இருந்த வினோத் அவர்களைப் பின்தொடர்ந்து சென்றுள்ளார். அப்போது, அவர்கள் கோவண்டி ரயில் நிலையம் அருகே ஷேக் என்பவரை விட்டுவிட்டு மீதம் இருந்த 2 பேர் பைக்கில் தப்பினர்.

இந்நிலையில், ஷேக் வைத்திருந்த கத்தியை வினோத் வாங்க முயற்சி செய்தபோது,  ஷேக் தனது கையில் இருந்த பீர் பாட்டிலை வைத்து வினோத்  தலையில் அடித்து நொறுக்கினார். அப்போது, அருகில் இருந்த பொதுமக்கள் ஷேக்கைப் பிடித்தனர்.

காயமடைந்த கான்ஸ்டபிள் வினோத்தை மீட்டுமருத்துவமனையில் அனுமதித்தனர். காயமடைந்த கான்ஸ்டபிள் வினோத் நெற்றியில் மூன்று தையல்கள் போடப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஷேக் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தப்பி ஓடிய மற்ற இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.