மேற்கு வங்கத்தில் ஒரு வீட்டில் கச்சா குண்டு வெடித்ததில் 2 பேர் உயிரிழப்பு, 2 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
மேற்கு வங்கத்தில் உள்ள கமர்ஹாட்டி கோலகாட் எனும் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இருந்த கச்சா குண்டு வெடித்ததில் அங்கிருந்த இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் இருவர் காயமடைந்துள்ளனர் என்று போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர்கள் சஜித் மற்றும் ராஜா எனும் இருவர் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
வெடிவிபத்து குறித்த தகவல் கிடைத்ததும், கமர்ஹாட்டி புறநகர் நிலையத்தில் உள்ள போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயமடைந்த 4 பேரையும் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். ஆனால் சிகிச்சை பலனின்றி இருவர் உயிரிழந்ததாகவும் ஒருவர் பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்று வருவதாகவும், மற்றொருவர் லேசான காயங்களுடன் சிகிச்சை பெறுவதாகவும் கூறியுள்ளனர். இந்த விபத்து குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.