நடந்து முடிந்த 17-வது மக்களவை தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது.இதனையடுத்து நேற்று இரண்டாவது முறையாக பிரதமராக நரேந்திர மோடி பதவி ஏற்றார்.அதில் மோடி தலைமையிலான அமைச்சரவையில் 58 அமைச்சர்கள் பதவியேற்றனர். அதில் 25 அமைச்சர்கள் , 24 இணையமைச்சர்கள், தனிப்பொறுப்புடன் கூடிய 9 அமைச்சர்கள் பதவியேற்றனர்.பின்னர் இலாகாக்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டது.இந்நிலையில் தற்போது பிரதமர் நரேந்திர மோடி நாட்டின் வளர்ச்சி, முதலீடு, வேலைவாய்ப்பை அதிகரிக்க 2 புதிய கேபினட் குழுக்களை அமைத்தார் .முதலீட்டிற்கான கேபினட் குழுவில் அமித்ஷா, நிர்மலா சீதாராமன், நிதின் கட்கரி, பியூஷ் கோயல் உள்ளனர்.வேலைவாய்ப்பு, திறன்மேம்பாட்டிற்கான கேபினட் குழுவில் அமித்ஷா, நிர்மலா சீதாராமன், நரேந்திரசிங் தோமர், ரமேஷ் பொக்ரியால், தர்மேந்திர பிரதான் உள்ளிட்டோருக்கு இடம் பெற்றுள்ளனர்.
நாட்டின் வளர்ச்சி,வேலைவாய்ப்பை அதிகரிக்க 2 புதிய கேபினட் குழு-பிரதமர் நரேந்திர மோடி
நடந்து முடிந்த 17-வது மக்களவை தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது.இதனையடுத்து நேற்று இரண்டாவது முறையாக பிரதமராக நரேந்திர மோடி பதவி