Terrorists: ஜம்மு-காஷ்மீர் பாரமுல்லாவில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு அருகே இன்று அதிகாலை பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில் இரண்டு

Baramulla

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு அருகே இன்று அதிகாலை பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த என்கவுண்டரில் இரண்டு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகவும், அப்பகுதியில் தேடுதல் நடவடிக்கை தொடர்ந்து நடந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே, அனந்த்நாக் மாவட்டத்தில் வனப்பகுதியில் பயங்கரவாதிகளை தேடும் நடவடிக்கை நடைபெற்று வரும் நிலையில், இந்த என்கவுன்டர் நடந்துள்ளது பதட்டத்தை அதிகரித்துள்ளது. அங்கு நான்காவது நாளாக, தேடுதல் பணிகளும், துப்பாக்கிச் சூடு நடைபெற்று வருகிறது.