கடந்த 24 மணிநேரத்தில் 2,104 உயிரிழப்பு...! 315,802 பேருக்கு பாதிப்பு...!

In India, 315,802 people have been infected with the corona virus in the last 24 hours.

இந்தியாவில் கொரோனா வைரஸ் காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் 315,802 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் 315,802 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், இதுவரை மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை  15,930,965 உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரனோ வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருபவர்கள் எண்ணிக்கை 21,86,276 ஆக உயர்ந்துள்ளது.இதுவரை 1,32,69,863 பேர் குணமடைந்துள்ளனர்.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் மொத்தம் 2,104 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,84,657 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 1,34,54,880 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 22,91,428 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மோசமாக பாதிக்கப்பட்ட நகரங்களான டெல்லி, மும்பை, அகமதாபாத், லக்னோ, போபால், கொல்கத்தா, அலகாபாத் மற்றும் சூரத் போன்றவை கிட்டத்தட்ட மருத்துவமனை படுக்கைகள் இல்லாமல் போய்விட்டன. ஐ.சி.யூ க்கு நோயாளிகள் மாற்றப்பட்டால் நிலைமை இன்னும் மோசமாகக்கூடும்.