இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,67,334 பேருக்கு கொரோனா தொற்று உறுதி...! 4,529 பேர் உயிரிழப்பு...!

In India, 2,67,334 people have been diagnosed with corona infection in the last 24 hours, while 4,529 have died.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,67,334 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 4,529 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவில் கொரோனா வைரசின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இந்த வைரஸை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிற நிலையில், பல மாநிலங்களில் பொது முடக்கம் ஆமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,67,334 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 4,529 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், தோற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,54,96,330 ஆகவும், உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,83,248 ஆகவும் அதிகரித்துள்ளது.

மேலும், 3,89,851 பேர் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளனர். 32,26,719 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை இந்தியா  முழுவதும்,18,58,09,302 பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர்.