சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைய முயன்ற 3 பேர் கைது – 95 கிலோ போதை பொருள் பறிமுதல்!

Three persons have been arrested in Bangladesh for attempting to enter India illegally and 90 kg of narcotics have been seized from them.

இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்றவங்காளதேசத்தை சேர்ந்த 3பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களிடம் இருந்து 95 கிலோ போதைப் பொருளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

அசாம் மாநிலத்தில் உள்ள இந்தியா மற்றும் வங்கதேச நாடுகளின் சர்வதேச எல்லைப்பகுதியில் வழக்கமான பாதுகாப்பு பணியில் எல்லை பாதுகாப்பு படையினர் ஈடுபட்டு இருந்துள்ளனர். அப்பொழுது வங்காளதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக இந்திய எல்லைக்குள் 3 பேர் நுழைந்துள்ளார். உடனடியாக அவர்களை சுற்றி வளைத்த பாதுகாப்பு படையினர் அவர்களிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.

அப்பொழுது அவர்கள் 3 பேரும் வங்காளதேசத்தை சேர்ந்த கடத்தல் கும்பல் என்பது தெரியவந்துள்ளது. மேலும், அந்த கும்பலிடமிருந்து 95 கிலோ போதைப் பொருளை பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்துள்ளனர். அத்துடன் வங்காளதேசத்தை சேர்ந்த 3 பேரையும் கைது செய்த எல்லை பாதுகாப்பு படையினர் அவர்களை மாநில போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.