அரசு வேலைகளில் பெண்களுக்கு 35% இட ஒதுக்கீடு – மத்தியப் பிரதேசத்தில் அதிரடி அறிவிப்பு!!

மத்தியப் பிரதேச மாநிலத்தில் சட்டசபை தேர்தலை முன்னிட்டு, பெண்களுக்கான 35% இடஒதுக்கீடு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது அம்மாநில அரசு.

Madhya Pradesh

மத்தியப் பிரதேச மாநிலத்தில் சட்டசபை தேர்தலை முன்னிட்டு, பெண்களுக்கான 35% இடஒதுக்கீடு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது அம்மாநில அரசு.

இந்த ஆண்டு இறுதியில் ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர், தெலங்கானா, மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதனால், தேசிய கட்சிகள் தேர்தலில் வெற்றி பெறுவதற்கான நோக்கில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன.

இந்நிலையில், மத்தியப்பிரதேசம் மாநிலத்தில் சட்டசபை தேர்தலை எதிர்கொள்ளும் வகையில், அரசு பணிகளில் பெண்களுக்கு 35% இடஒதுக்கீடு வழங்கும் அறிவிப்பை அம்மாநில அரசு வெளியிட்டுள்ளது.

காவல்துறை மற்றும் பிற அரசுப் பணிகளில் 35 சதவீத காலிப் பணியிடங்கள் பெண்களைக் கொண்டு நிரப்பப்படும் என்று முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் அறிவித்துள்ளார். மேலும், ஆசிரியர் பணியிடங்களில் பெண்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு அரசு அளிக்கும் என்று கூறியுள்ளார்.

அதாவது, வனத் துறையைத் தவிர்த்து, அரசுப் பணிகளில் பெண்களுக்கு 35% இடஒதுக்கீடு வழங்க, 1997ல்  மத்தியப் பிரதேச  அரசு பணியாளர் சட்டத்தில் இருக்கும் விதிகளில் திருத்தம் செய்யப்பட்டு பெண்களுக்கு 35% இடஒதுக்கீடு வழங்கப்படும் என அம்மாநில அரசு அறிவித்து உள்ளது.