தெலுங்கானா வாகன சோதனையில் 7.30 கோடி மதிப்புள்ள 3,650 கிலோ போதை பொருள் பறிமுதல்...!

Police have seized 3,650 kg of narcotics worth Rs 7.30 crore during a vehicle raid in Telangana.

தெலுங்கானாவில் நடந்த வாகன சோதனையில் 7.30 கோடி மதிப்புள்ள 3,650 கிலோ போதை பொருள் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தெலுங்கானாவில் உள்ள பத்ராத்ரி கொத்தகுடெம்  என்னும் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியே வந்த சந்தேகத்துக்குரிய இரண்டு லாரிகளை வழிமறித்த போது, லாரி ஓட்டுனர்கள் முன்னுக்குப்பின் முரணான பதிலை அளித்துள்ளனர். எனவே, போலீசார் சந்தேகம் அடைந்து வாகனத்தில் சோதனை செய்துள்ளனர். அப்பொழுது மரிஜுவானா என்ற 3,650 கிலோ எடை கொண்ட போதைப்பொருள் அந்த லாரிகளில் கடத்தப்பட்டு இருந்தது தெரியவந்தது.

இதனை தொடர்ந்து போலீசார் போதைப்பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர். மேலும், இரண்டு லாரிகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. இந்த வாகனத்தில் வந்த நான்கு பேரை போலீசார் கைது செய்துள்ளதுடன் அவர்களிடம் தீவிர விசாரணையும் நடத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு பறிமுதல் செய்யப்பட்ட3,650 கிலோ எடை கொண்ட போதைப்பொருள் 7.30 கோடி மதிப்புடையது எனவும் கூறப்படுகிறது.