மேற்கு வங்கம் ரயில் விபத்து.. 5 பேர் உயிரிழப்பு.! மீட்பு பணி தீவிரம்..!

மேற்கு வங்கம் : டார்ஜிலிங்கில் கஞ்சன்ஜங்கா விரைவு ரயில் மீது சரக்கு ரயில் மோதி பெரும் விபத்து நிகழ்ந்துள்ளது. தண்டவாளத்தில் நின்று கொண்டிருந்த பயணிகள் ரயில்

TrainAccident

மேற்கு வங்கம் :டார்ஜிலிங்கில் கஞ்சன்ஜங்கா விரைவு ரயில் மீது சரக்கு ரயில் மோதி பெரும் விபத்து நிகழ்ந்துள்ளது. தண்டவாளத்தில் நின்று கொண்டிருந்த பயணிகள் ரயில் மீது சரக்கு ரயில் மோதியதில், ரயிலின் கடைசி 3 பெட்டிகள் முற்றிலும் சீர்குலைந்தன.

தகவலறிந்த பேரிடர் மீட்புக்குழு, மருத்துவக் குழு சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளது. இதில் பலர் காயமடைந்ததாகத் தெரிகிறது. விபத்தில் ஐந்து பயணிகள் இறந்துள்ளனர், 20-25 பேர் காயமடைந்துள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது.

unknown node

சரக்கு ரயில் சிக்னலில் நிற்காமல் வந்ததே, இந்த விபத்துக்கு காரணம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.  இந்த விபத்து செய்தியறிந்து அதிர்ச்சியடைந்ததாகவும், போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.

unknown node

Kanchanjungha [file image]மேலும், இந்த விபத்து குறித்து மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், “எதிர்பாராத விபத்து வடகிழக்கு எல்லை ரயில்வே மண்டலத்தில் நடந்துள்ளது. மீட்புப் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருவதாகவும், காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு வருகின்றனர், உயர் அதிகாரிகள் சம்பவ இடத்தில் உள்ளனர்” என்றும்  தெரிவித்துள்ளார்.

unknown node