உலக தடகள சாம்பியன்ஷிப்: தொடர் ஓட்டத்தில் இந்தியாவுக்கு 5வது இடம்!

2023 உலக தடகள சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டியில் ஆண்கள் பிரிவு 4x400மீ தொடர் ஓட்டத்தில் இந்தியா 5வது இடத்தைப் பிடித்தது. ஹங்கேரியின் புடாபெஸ்டில் நடந்த

World Athletics Championships 2023

2023 உலக தடகள சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டியில் ஆண்கள் பிரிவு 4×400மீ தொடர் ஓட்டத்தில் இந்தியா 5வது இடத்தைப் பிடித்தது. ஹங்கேரியின் புடாபெஸ்டில் நடந்த இறுதிப் போட்டியில் இந்தியா 2:59:92 வினாடிகளில் வெற்றி பெற்றது.

இறுதிப்போட்டியில் இந்திய வீரர்கள் முஹம்மது அனஸ், அமோஸ் ஜேக்கப், அஜ்மல் வரியத்தொடி, ராஜேஷ் ரமேஷ் ஆகியோர் இலக்கை 2:59.92 வினாடிகளில் அடைந்தனர். அமெரிக்க வீரர்கள் இலக்கை 2:57.31 வினாடிகளில் முடித்து தங்கப் பதக்கத்தை வென்றனர். பிரான்ஸ், இங்கிலாந்து மற்றும் ஜமைக்கா 2, 3 மற்றும் 4 இடங்களைப் பிடித்தன.

பிரான்ஸ், 2:58.45 வினாடிகளில் கடந்து வெள்ளிப் பதக்கத்தை வென்றது, அதே நேரத்தில் கிரேட் பிரிட்டன் பந்தயத்தை 2:58.71 வினாடிகளில் முடித்து வெண்கலப் பதக்கத்தை வென்றது. தகுதிச் சுற்றில், இந்தியா, கிரேட் பிரிட்டன் ஆகிய இரு அணிகளும் 2:59:42 வினாடிகளில் வெற்றி பெற்று முதல் நான்கு இடங்களைப் பிடித்ததன் மூலம் இந்தியா இறுதிப் போட்டிக்குத் தானாக தகுதி பெற்றது.