இன்று நாடு முழுவதும் 77வது சுதந்திர தினவிழா கோலாலமாக கொண்டாடப்படவுள்ளது. அதற்கான ஏற்பாடுகள் வெகு தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்திய தலைநகர் டெல்லி, மாநில தலைநகர்கள் என பல்வேறு இடங்களில் சுதந்திர தின ஏற்பாடுகள் வெகு தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
பிரதமர் நரேந்திர மோடி கொடியேற்றி உரையாற்ற உள்ள டெல்லியில் உள்ள செங்கோட்டையில் இதுவரை இல்லாத அளவு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. செங்கோட்டை பகுதியை சுற்றி சுமார் 10 ஆயிரத்திற்கும் அதிகமான பாதுகாப்பு படை வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.
