77வது சுதந்திர தினவிழா : செங்கோட்டை வந்தடைந்தார் பிரதமர் மோடி.!

சற்று முன்னர் டெல்லியில் மஹாத்மா காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திவிட்டு, அங்கிருந்து செங்கோட்டை நோக்கி புறப்பட்டார் பிரதமர் மோடி. தற்போது ராணுவ

PM Modi Arrives at Red Fort, Delhi .

77வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி 10வது முறையாக தேசிய கோடி ஏற்றுவதற்கு ஆயத்தமாகி வருகிறார். அதற்கான முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

சற்று முன்னர் டெல்லியில் மஹாத்மா காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திவிட்டு, அங்கிருந்து செங்கோட்டை நோக்கி புறப்பட்டார் பிரதமர் மோடி. தற்போது ராணுவ வீரர்களின் மரியாதையோடு செங்கோட்டை வந்தடைந்துள்ளார் பிரதமர் மோடி. அங்கு முப்படை வீரர்களின் ராணுவ அணிவகுப்பை பிரதமர் மோடி ஏற்றுக்கொள்கிறார்.

இதனை தொடர்ந்து, பிரதமர் மோடி இந்திய தேசிய கோடியை செங்கோட்டையில் ஏற்றுகிறார். அதன் பிறகு நாட்டு மக்கள் மத்தியில் பிரதமர் மோடி உரையாற்றவுள்ளார். அடுத்தாண்டு மக்களவை தேர்தல் வரவுள்ளதால் தற்போது பிரதமர் உரையில் ஏதேனும் முக்கிய அறிவிப்புகள் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.