உ.பியில் நடந்த கோர விபத்து .., 9 பேர் பலி, 27 பேர் காயம்..!

Nine killed in truck-bus collision in Uttar Pradesh

உத்தரபிரதேச மாநிலத்தில் லாரி மற்றும் பேருந்து மோதியதில் 9 பேர் உயிரிழந்தனர்.

உத்தரபிரதேசத்தில் பேருந்து ஓன்று அதிகாலை 5.30 மணியளவில் டெல்லியில் இருந்து லக்னோ வழியாக உ.பி.யின் பஹ்ரைச் நோக்கிச் சென்றுகொண்டிருந்தபோது எதிரே வந்த லாரி மீது பேருந்து மோதியது. பேருந்து மற்றும் லாரி இரண்டும் மிக அதிக வேகத்தில் வந்ததால் மிகபெரிய விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர். 27 பேர் படுகாயமடைந்தனர். சம்பவ இடத்தித்திற்கு வந்த மீட்புக் குழுவினர் காயமடைந்தவர்களை உள்ளூர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பலத்த காயமடைந்தவர்களை மாநில தலைநகர் லக்னோவில் உள்ள கேஜிஎம்யூ மருத்துவமனைக்கு  அழைத்து சென்றனர். மற்றவர்கள் பாராபங்கி மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் இந்த சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்தார். இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சமம், விபத்தில் காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000 நிவாரணம் அறிவித்துள்ளார்.