டெல்லி உள்துறை அமைச்சக அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.! 

சென்னை: டெல்லி உள்துறை அமைச்சக அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

Delhi Home Ministry

சென்னை:டெல்லி உள்துறை அமைச்சக அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

டெல்லியின் வடக்கு பிளாக்கில் உள்ள மத்திய உள்துறை அமைச்சக வளாகத்தில் வெடிகுண்டு இருப்பதாக காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு மிரட்டல் கடிதம் மின்னஞ்சல் வாயிலாக கிடைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

உடனடியாக, சம்பவ இடத்திற்கு இரண்டு தீயணைப்பு வாகனங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. தற்போது பாதுகாப்பு அதிகாரிகள் உள்துறை அமைச்சக வளாகத்தில் தீவிர சோதனையை மேற்கொண்டுள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.