சுகாதார மந்திரி பெயரில் போலி முகநூல் கணக்கு வைத்து பணம் பறித்த சிறுவன் கைது

ஒடிசா மாநிலம் சம்பல்பூர் நகராட்சியின் முன்னாள் துணை தலைவர் சித்தார்த் ஷா போலீசாரிடம் புகார் ஒன்றை கொடுத்து உள்ளார்.அந்த புகாரில் தன் பெயரை வைத்து யாரோ ஒருவர் முகநூலில் போலி கணக்கு தொடங்கி பயன்படுத்தி வருவதாகவும், ஏரளமானோரிடம் இருந்து பரிசு பொருட்கள் மற்றும் பணம் ஆகியவற்றை பெற்று வருவதாகவும் புகார் அளித்தார்.
இது குறித்து விசாரணை நடத்திய போலீசார் 17 வயது சிறுவன் ஒருவன் இந்த செயலில் ஈடுபட்டதை கண்டுபிடித்து அவனிடம் விசாரணை செய்தனர். விசாரணையில் சில அதிர்ச்சியான தகவலும் கிடைத்தது.அந்த சிறுவன் ஒடிசா சுகாதார மந்திரி என் .கே தாஸ் உட்பட நூற்றுக்கணக்கான அரசியல் தலைவர்கள் மற்றும் அதிகாரிகளின் பெயரில் போலி முகநூல் கணக்குகள் தொடங்கி அவற்றில் இருந்து ஏரளமானோரிடம் இருந்து பரிசு பொருட்கள் மற்றும் பணம் வாங்கியது தெரியவந்தது.
இந்த சிறுவன் பத்தாம் வகுப்பு வரைதான் படித்துள்ளான்.மேலும் ஏற்கனவே இரண்டு வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளிவந்த பிறகு இத்தகைய ஏமாற்று செயல்களில் ஈடுபட்டதாக போலீசார் கூறியுள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!
May 3, 2025