தென்கிழக்கு அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளது.
இதனால், அடுத்த 24 உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்பு உள்ளது. உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 48 மணி நேரத்தில் வடக்கு நோக்கி நகரும்.
unknown nodeCyclone Biparjoy [FileImage]
இது அடுத்த 48 மணி நேரத்தில் தென்கிழக்கு மற்றும் அதை ஒட்டிய கிழக்கு-மத்திய அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும். இந்த காற்றழுத்த தாழ்வு மண்டல குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகி அடுத்த 48 மணி நேரத்தில் புயலாக உருவாகலாம் என என இந்திய வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
unknown noderain tn [Image source: file image ]
தென்மேற்கு பருவமழை:
அரபிக்கடல் பகுதியில் இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி, அதைத் தொடர்ந்து தீவிரமடைந்தால், தென்மேற்கு பருவமழை தொடங்க வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவிக்கின்றனர்.
unknown noderain [Image source: file image ]
கனமழை:
குறிப்பாக, அரபிக்கடலில் உருவாகும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, மும்பை மற்றும் கொங்கன் பகுதி உள்ளிட்ட மகாராஷ்டிராவில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
unknown nodeheavyrain [Imagesource : Businesstoday]
பைபர்ஜோய் புயல்:
இதற்கிடையில், அந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி, அது புயலாக உருவானால், அதற்கு “பைபர்ஜோய் புயல்” என்று பெயர் வைக்கப்படும் என கூறப்படுகிறது.
