மனைவிக்கு விவகாரத்து உட்பட முக்கிய தேவைகளை பூர்த்தி செய்து மரணித்த மருத்துவர்.!

புற்று நோயால் பாதிக்கப்பட்ட மருத்துவர் தனது மரணத்திற்கு முன்பு மனைவிக்கு விவாகரத்து கொடுத்துவிட்டு பொருளாதார ரீதியான தேவைகளையும் செய்துகொடுத்த சம்பவம்

புற்று நோயால் பாதிக்கப்பட்ட மருத்துவர் தனது மரணத்திற்கு முன்பு மனைவிக்கு விவாகரத்து கொடுத்துவிட்டு பொருளாதார ரீதியான தேவைகளையும் செய்துகொடுத்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கனா மாநிலம் கம்மத் நகரை சேர்ந்தவர் ஹர்ஷ்வர்தன். 33 வயதான இவர் ஆஸ்திரேலியாவில் மருத்துவராக பணியாற்றி வந்தார். இவருக்கும் ஹேமா என்ற பெண்ணிற்கும் கடந்த 2020-ஆம் ஆண்டு திருமணம் முடிந்தது. பிறகு ஆஸ்ரேலியாவுக்கு சென்ற ஹர்ஷ்வர்தன் ஜிம்மில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தபோது, அவருக்கு இருமல் மற்றும் மூச்சுத் திணறல் ஏற்பட்டது.

பிறகு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டபோது  அவருக்கு நுரையீரல் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. 2 ஆண்டுகளில் மரணம் அடைந்துவிடுவோம் என்பதை அறிந்த ஹர்ஷ்வர்தன் இந்த அதிர்ச்சியான தகவலை தன்னுடைய பெற்றோர் மற்றும் மனைவியிடம் கூறியுள்ளார்.

மேலும் தன்னுடைய மனைவி விதவை ஆகிவிட கூடாது என்று எண்ணி  ஹர்ஷ்வர்தன் இறப்பதற்கு முன்பே மனைவி ஹேமாவுக்கு விவாகரத்து கொடுத்துவிட்டு பொருளாதார ரீதியாக அவருக்கு தேவயானவற்றை செய்துகொடுத்துள்ளர்.  அதுமட்டுமின்றி ஆஸ்ரேலியாவில் புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வரும்போதே ஹர்ஷ்வர்தன் 3 லட்சம் செலவு செய்து தனது உடலை இந்தியாவிற்கு கொண்டு செல்வதற்கான ஏற்பாடுகளையும் செய்தார்.

மார்ச் 24-ஆம் தேதி உயிரிழந்த ஹர்ஷ்வர்தன் உடல் விமானம் மூலம் கடந்த 5-ஆம் தேதி அவருக்கு இறுதிச்சடங்கு நடைபெற்றது. ஹர்ஷ்வர்தனின் விருப்பப்படியே அவரது இறுதிச் சடங்குகள் நடைபெற்றாலும் பெற்றோர்களும், நண்பர்களும் அதிர்ச்சியில் இருந்து இன்னும் மீளவில்லை.