Shocking:எல்ஐசி அலுவலகத்தில் பயங்கர தீ விபத்து!

மும்பை சாண்டாகுரூஸில் உள்ள எல்ஐசி(LIC) அலுவலக கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் அப்பகுதியினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மும்பை சாண்டாகுரூஸில் உள்ள எல்ஐசி(LIC) அலுவலக கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் அப்பகுதியினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மும்பையில் உள்ள சாண்டாகுரூஸ் பகுதியில் உள்ள ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் (எல்ஐசி) இரண்டு மாடி அலுவலக கட்டிடத்தில் இன்று காலை 7 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து,சம்பவ இடத்திற்கு 8 தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட நிலையில்,தற்போது தீ கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.மேலும்,இது தொடர்பாக தீயணைப்பு அதிகாரிகள் கூறுகையில்:”எலக்ட்ரிக் வயரிங், நிறுவுதல், கணினிகள், கோப்பு பதிவுகள், மர சாமான்கள் போன்றவற்றில் தீ விபத்து ஏற்பட்டது.எனினும்,இதுவரை, காயங்களோ, உயிரிழப்புகளோ ஏற்படவில்லை என தெரிவித்துள்ளனர்.

unknown node