60 பேர் கொண்ட குழுவை பணியமர்த்தியுள்ள 'குரோஃபர்ஸ' நிறுவனம்.!

இந்தியாவின் முதன்மையான பள்ளிகள் மற்றும் பொறியியல் கல்லூரிகளைச் சேர்ந்த 60 பேர் கொண்ட குழுவை பணியமர்த்தியுள்ளதாக ஆன்லைன் மளிகை விநியோக நிறுவனமான 'குரோஃபர்ஸ்'

இந்தியாவின் முதன்மையான பள்ளிகள் மற்றும் பொறியியல் கல்லூரிகளைச் சேர்ந்த 60 பேர் கொண்ட குழுவை பணியமர்த்தியுள்ளதாக ஆன்லைன் மளிகை விநியோக நிறுவனமான ‘குரோஃபர்ஸ்’ இன்று தெரிவித்துள்ளது.

குரோஃபர்ஸ் நிறுவனம் கூறுகையில், நாங்கள் எப்போதும் சவாலான சூழலில் வேலை செய்கிறோம், இங்கு இலக்குகளை கொண்ட பணியாளர்கள் தேவை, அவர்களிடம் தரமான வேலைகளை வழங்க முடியும்.

இதற்கிடையில், குரோஃபர்ஸ் நிறுவனம் நாடு முழுவதும் 23,000 க்கும் மேற்பட்ட குழுவை கொண்டுள்ளது. மேலும், கடந்த சில மாதங்களாக நெருக்கடியால்  பாதிக்கப்பட்டுள்ள தொழில்களில் இருந்து விநியோக ஊழியர்களை பணியமர்த்தியுள்ளதாக தெரிவித்துள்ளது.

அந்த வகையில், கொரோனா தொற்றுநோய்க்கு மத்தியில் அதிக எண்ணிக்கையிலான மக்கள் ஆன்லைன் மளிகை கடையை நோக்கி வருகிறார்கள். இந்நிலையில், ஊரடங்கு தொடங்கியதிலிருந்து 18 லட்சத்துக்கும் மேற்பட்ட புதிய பயனர்கள் மளிகை பொருட்களை வாங்கியுள்ளதாக க்ரோஃபர்ஸ் தெரிவித்துள்ளது.