12,000 இந்திய அரசு இணையத்தளங்களை குறி வைத்துள்ள ஹேக்கர்ஸ்.! எச்சரிக்கும் மத்திய அரசு.!

12,000 அரசு இணையதள சேவைகளை இந்தோனீசிய ஹேக்கர்ஸ் குழு குறிவைத்துள்ளதாக மத்திய அரசு சார்ப்பில் எச்சரிக்கை வெளியாகியுள்ளது.

12,000 அரசு இணையதள சேவைகளை இந்தோனீசிய ஹேக்கர்ஸ் குழு குறிவைத்துள்ளதாக மத்திய அரசு சார்ப்பில் எச்சரிக்கை வெளியாகியுள்ளது.

மத்திய அரசானது, இணைய பாதுகாப்பு குறித்த ஓர் முக்கிய எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த எச்சரிக்கை பதிவானது, மத்திய மாநில அரசு இணையதள பக்கங்கள் குறித்தது. அரசு இணையதள பக்கங்களை இந்தோனீசிய ஹேக்கர்கள் குறிவைத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

12 ஆயிரம் அரசு இணையதளங்கள் :

இது குறித்து, மத்திய அரசு, வெளியிட்ட இணைய பாதுகாப்பு குறித்த அறிக்கையில்,  இந்தோனேசியாவைச் சேர்ந்த சைபர் தாக்குதல் குழுவானது,  12,000 இந்திய அரசு இணையதளங்களை குறிவைத்துள்ளது எனவும், அதனால் தரவுகளை பாதுகாப்பாக  வைக்கவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மத்திய அரசு எச்சரிக்கை :

இந்த எச்சரிக்கை அறிவிப்பை, மத்திய உள்துறை அமைச்சகத்தின் இந்திய சைபர் கிரைம் ஒருங்கிணைப்பு மையம் நேற்று ( வியாழக்கிழமை) வெளியிட்டது. மேலும், மாநில மற்றும் மத்திய அரசின் இணையதளங்கள் குறிவைக்கப்படலாம் எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எய்ம்ஸ் இணைய சேவை :

கடந்த ஆண்டு, ஒரு பெரிய இணையவழி தாக்குதலில், அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகமான AIIMS அமைப்பின் இணையதள சேவைகள் முடக்கப்பட்டுள்ளது. அதில்  பதியப்பட்ட பதிவுகளை மற்ற மருத்துவமனை சேவைகளை அணுக முடியாதபடி தாக்குதல் நடைபெற்றது.