வங்கக்கடலில் உருவாகிறது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி!

வடக்கு அந்தமான் மற்றும் அதனையொட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி வரும் 29ம் தேதி உருவாகுவதாக இந்திய வானிலை மையம் தகவல்

bay-of-bengal-low-pressure

வடக்கு அந்தமான் மற்றும் அதனையொட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி வரும் 29ம் தேதி உருவாகுவதாக இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதற்கடுத்த 24 மணி நேரத்தில் மத்தியகிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளது

அதாவது, அதற்கு அடுத்த நாளான (செப்.30ம் தேதி) தாழ்வுப்பகுதி உருவாகும் என கணிக்கப்பட்ட நிலையில், ஒருநாள் முன்னதாகவே உருவாகிறது. மேலும், இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து மேலும் தீவிரமடைய கூடும். இதனால், தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பீகார், மேற்கு வங்காளம்,  ஜார்க்கண்ட், சிக்கிம் ஆகிய வடமாநிலங்களில் அடுத்த 2 நாட்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. தற்போது, பெய்து வரும் வடமேற்கு பருவமழை செப்டம்பர் 30-ஆம் தேதி உடன் முடிவடைகிறது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அக்டோபர் 1-ஆம் தேதி வரை மிதமான வழக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.