டெல்லியில் தன்னுடன் பேச மறுத்த பெண்ணை கத்தியால் ஒரு நபர் பலமுறை குத்தியுள்ளார்.
தலைநகர் டெல்லியில் ஆதர்ஷ் நகரில் கடந்த திங்கள்கிழமை அன்று21 வயது பெண் ஒருவரை சுக்விந்தர் சிங் எனும் நபர் பலமுறை கத்தியால் குத்தியுள்ளார். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்த பெண்சுக்விந்தர் சிங்கிடம் பேச மறுத்ததாகவும், அதன் காரணமாக அந்த பெண்ணை பலமுறை குத்தியதும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது. தற்போது அந்த பெண்ணிற்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சுக்விந்தர் சிங், அந்த பெண்ணை கத்தியால் குத்திவிட்டு அங்கிருந்து தப்பியோடிவிட்டார். பின்னர் தலைமறைவாகி இருந்த சுக்விந்தர் சிங்கை டெல்லி காவல் துறையினர் நேற்று கைது செய்தனர்.
unknown node