குடிமகனுடன் குடிபோதையில் விசில் அடித்து வைப் செய்த காவலர்.! வைரல் வீடியோ..

ஆந்திரப் பிரதேசம் : குடிபோதையில் காவல்துறை அதிகாரிகள் அநாகரியமான செயல்களில் ஈடுபடும் வீடியோக்கள் அடிக்கடி வைரலாகி வருகின்றன. அது சிலருக்கு வேடிக்கையாக

Police Officer - drunken

ஆந்திரப் பிரதேசம் :குடிபோதையில் காவல்துறை அதிகாரிகள் அநாகரியமான செயல்களில் ஈடுபடும் வீடியோக்கள் அடிக்கடி வைரலாகி வருகின்றன. அது சிலருக்கு வேடிக்கையாக இருக்கிறது. இது போன்ற மற்றொரு வைரல் வீடியோ வெளியாகியுள்ளது.

ஆந்திரப் பிரதேசம் மாநிலம் பிரகாசம் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒங்கோல் என்ற பகுதியில், குடிபோதையில் இருந்த ஒரு காவல் துறை அதிகாரி ஒருவர், விசில் அடித்துக்கொண்டே ஒரு பையனை ஆட சொல்வதும், அதனை ரசிப்பதும் போன்ற வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

வைரலாக பரவும் அந்த வீடியோவில் பணியில் இருக்கும் காவல் அதிகாரி சரியான போதையில் இருப்பது போன்றும், கூடுதலாக அருகில் குடி போதையில் இருக்கும் நபர் தனது தொலைபேசியில் ஒரு இசைக்கு நடனமாடுகிறார். இந்த போலீஸ்காரர் அதை வேடிக்கை பார்க்கிறார்.

இந்த காட்சி மக்களை சிரிக்க வைத்தாலும், காவல்துறையின் வெளிப்படையான திறமையின்மை குறித்த விவாதத்தையும் எழுப்பியுள்ளது. Glint Insights Media என்கிற ஒரு பயனர், இந்த நிகழ்வின் காட்சிகளை இன்று தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

unknown node