இந்த நேரம் தான் சாலைகளில் பயணிக்க தவறான நேரம்.! வெளியான போக்குவரத்து சர்வே.!

பிற்பகல் 3 மணி முதல் இரவு 9 வரை அதிக விபத்துகள் ஏற்படுவதாகவும், நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 6 மணி வரையில் விபத்துகள் குறைவாக ஏற்படுவதாகவும் சர்வே ரிப்போர்ட்

பிற்பகல் 3 மணி முதல் இரவு 9 வரை அதிக விபத்துகள் ஏற்படுவதாகவும், நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 6 மணி வரையில் விபத்துகள் குறைவாக ஏற்படுவதாகவும் சர்வே ரிப்போர்ட் வெளியாகியுள்ளது.

இந்திய சாலைகளில் பயணிக்க ஏதுவான நேரம் மற்றும் விபத்துகள் அதிகம் ஏற்படும் நேரம் என சர்வே ரிப்போர்ட் தற்போது வெளியாகியுள்ளது. அதன் படி, 2021ஆம் ஆண்டு இந்திய சாலைகளில் மொத்தமாக 4.12 லட்ச விபத்துகள் பதிவாகியுள்ளன.

அதில் பிற்பகல் 3 மணி முதல் இரவு 9 மணி வரையிலான கால கட்டத்தில் பதிவான விபத்துகள் மட்டுமே 1.58 லட்ச விபத்துகளாகும் என சர்வேயில் தெரியவந்துள்ளது. அந்த சமயம் தான் விபத்துகள் அதிகம் ஏற்படுகிறது என்று தெளிவாகியுள்ளது .

அதே போல நள்ளிரவு 12 மணி முதல் விடியற்காலை 6 மணிக்கு அதிகமாக விபத்துகள் ஏற்படுவதில்லையாம். அதில் விபத்து விகிதம் 10 சதவீதத்திற்கு கீழே தான் இருக்கிறது என்றும் அந்தபோக்குவரத்துக்கு விபத்து சர்வேயில் தெரியவந்துள்ளது.