உ.பி.யில் இஸ்லாமிய மாணவரை தாக்கச் சொன்ன ஆசிரியர்! வைரலாகும் வீடியோ..,

உத்தரபிரதேச மாநிலம் முசாஃபர்நகரில் உள்ள பள்ளி ஆசிரியர் ஒருவர், வகுப்பறைக்குள் படிக்கும் மாணவர்கள் அனைவரையும் வரிசையாக வரவைத்து, இஸ்லாமிய மாணவர் ஒருவரை

Muslim student in UP

உத்தரபிரதேச மாநிலம் முசாஃபர்நகரில் உள்ள பள்ளி ஆசிரியர் ஒருவர், வகுப்பறைக்குள் படிக்கும் மாணவர்கள் அனைவரையும் வரிசையாக வரவைத்து, இஸ்லாமிய மாணவர் ஒருவரை கன்னத்தில் அறையை சொல்லியுள்ளார். கப்பர்பூர் கிராமத்தில் நடந்த இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருவதால், போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

வைரலாகும் அந்த வீடியோவில், மாணவர்களிடம் “ஏன் மெதுவாக அடிக்கிறாய்? வேகமாக அடி’ என ஆசிரியர் த்ரிப்தா தியாகி கூறுவது அதில் பதிவாகியுள்ளது. இதுகுறித்து மன்சூர்பூர் காவல் கண்காணிப்பாளர் கூறுகையில், பள்ளியின் முதல்வரிடம் பேசியதாகவும், வீடியோ குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

இந்த சம்பவம் குறித்து கல்வித்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், ஆசிரியர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உயர் காவலர் கூறினார். அதன்படி, ஆசிரியர் மற்றும் பள்ளி நிர்வாகத்திடம் விசாரணை நடத்த குழு அமைக்கப்பட்டுள்ளதாக அடிப்படைக் கல்வித் துறை அதிகாரி சுபம் சுக்லா தெரிவித்துள்ளார்.