டிக்கெட் எடுக்காத பயணிக்கு அடி உதை.! சஸ்பெண்ட் செய்யப்பட்ட ரயில்வே டிக்கெட் பரிசோதகர்கள்.!

பீகார் மாநிலத்தில் ரயிலில் பயணம் செய்த பயணியை தாக்கிய டிக்கெட் பரிசோதகர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

பீகார் மாநிலத்தில் ரயிலில் பயணம் செய்த பயணியை தாக்கிய டிக்கெட் பரிசோதகர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

பீகார் மாநிலம் முசாபர்பூரில் ஒரு ரயில் பயணியை டிக்கெட் எடுக்காத காரணத்தால் ரயில்வே டிக்கெட் பரிசோதகர்கள் அடித்து உதைத்த வீடியோ இணையத்தில் வெகு வைரலாக பரவி வருகிறது.

கடந்த ஜனவரி 2 ஆம் தேதி இரவு மும்பையில் இருந்து பீகார் மாநிலம் ஜெய்நகர் செல்லும் ரயிலில் தோலி ரயில் நிலையம் அருகே ஒரு பயணி ஒருவர் டிக்கெட் எடுக்காமல் பயணித்ததாக தெரிகிறது. அப்போது வந்த டிக்கெட் பரிசோதகர் டிக்கெட் கேட்டு விசாரிக்கையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது .

இந்த சம்பவத்தின் போது டிக்கெட் பரிசோதகர் உடன் இன்னொரு நபரும் இருந்துள்ளார். அப்போது அந்த டிக்கெட் பரிசோதகர் பயணியை மேல் இருக்கையில் இருந்து கீழே இறக்கி தனது காலால் மிதித்து தாக்கியுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வெகு வைரலாக பரவி வருகிறது.

இந்த தாக்குதல் சம்பவத்தை அடுத்து தாக்குதலில் ஈடுபட்ட இரு ரயில்வே ஊழியர்களையும் சஸ்பெண்ட் செய்ததாக ரயில்வே தரப்பில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.