மகாராஷ்டிராவில் நேற்று ஒரே நாளில் மட்டும் 3,427 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதித்தவரின் எண்ணிக்கை 1,04,568- ஆக அதிகரித்துள்ளது. மேலும் நேற்று ஒரே நாளில் 113 பேர் உயிரிழந்த நிலையில் பலியானவர்களின் எண்ணிக்கை 3830-ஆக அதிகரித்துள்ளது.
அம்மாநிலத்தில் கடுமையான ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்தது. தற்போது அத்தியாவசிய தேவைகள் கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதால் அதற்காக சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், இந்தியாவில் நேற்று 11,458 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், பாதிப்பு எண்ணிக்கை 3,08,993 ஆக உயர்ந்துள்ளது. மேலும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 8,884 ஆகவும், குணமடைந்தோர் எண்ணிக்கை 1,54,330 ஆகவும் உயர்ந்துள்ளது.