உறங்கிக் கொண்டிருந்த பக்தர்கள் மீது டெம்போ மோதியதில் ஒருவர் பலி-வைரலாகும் வீடியோ

கர்நாடக மாநிலத்தில் உறங்கிக் கொண்டிருந்த பக்தர்கள் மீது டெம்போ மோதியதில் ஒருவர் உயிரிழந்தார்.

கர்நாடக மாநிலத்தில் உறங்கிக் கொண்டிருந்த பக்தர்கள் மீது டெம்போ மோதியதில் ஒருவர் உயிரிழந்தார்.

கொப்பல் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற ஹுலிகெம்மா கோயில் வளாகத்தில் உறங்கிக் கொண்டிருந்த பக்தர்கள் மீது டெம்போ மோதியதில் ஒருவர் உயிரிழந்தார். இந்த சம்பவத்தில் 3 பெண்கள் உட்பட 4 பேர் காயமடைந்துள்ளனர்.

இறந்தவர் கொப்பல் மாவட்டம் கரடகி நகருக்கு அருகில் உள்ள நந்திஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த 75 வயதான திப்பண்ணா என்றும், இதில் படுகாயம் அடைந்தவர்கள் கொப்பலத்தில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர் என்றும் தெரிவித்தனர்.

மேலும் இச்சம்பவம் குறித்து முனிராபாத் போலீசார் கூறுகையில், குடிபோதையில் டிரைவர் பிரேக்கிற்கு பதிலாக ஆக்சிலேட்டரை அழுத்தியது சோகத்திற்கு வழிவகுத்ததாக தெரிவித்தனர். சிசிடிவி கேமராவில் பதிவான இந்த கொடூர சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

unknown node