டெல்லியில் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் தன் மீது பாலியல் சீண்டலில் ஈடுபட்டார் என பெண் பத்திரிக்கையாளர் வீடியோ எடுத்து புகார் அளித்துள்ளார்.
டெல்லியில், முன்னணி பத்திரிக்கை நிறுவனத்தில் பணியாற்றி வரும் ஒரு பெண் பத்திரிக்கையாளர், அண்மையில் டெல்லி, நியூ பிரண்ட்ஸ் காலனியில் உள்ள தனது வீட்டில் இருந்து மாளவியா நகரில் உள்ள தனது நண்பரின் வீட்டிற்கு உபர் செயலி மூலம் வந்த ஆட்டோவில் பயணித்து சென்று கொண்டிருந்தார்.
unknown nodeஅப்போது, ஆட்டோ ஓட்டுநர் வினோத் குமார் என்பவர் , ஆட்டோவில் பின்பக்கம் வாகனத்தை பார்க்கும் கண்ணாடி மூலம் பெண் பத்திரிக்கையாளர்களின் மார்பகங்களை பார்த்ததாகவும், இதனை அறிந்து, அந்த பெண் இடம் மாறி அமர்ந்தாலும், மீண்டும் அதே போல அந்த ஆட்டோ ஓட்டுநர் மறுபக்க கண்ணாடி மூலம் தனது மார்பகங்களை பார்த்தாக பெண் பத்திரிக்கையாளர் குற்றம் சாட்டியுள்ளார்.
unknown nodeமேலும் இந்த சம்பவம் தொடர்பாக சம்பந்தப்பட்ட உபேர் செயலி பாதுகாப்பு அம்சத்தை தொடர்பு கொண்டாலும் எந்த பயனும் அளிக்கவில்லை எனவும் அவர் குற்றம் சாட்டினார். இந்த சம்பவத்தை வீடியோவாக பதிவு செய்து அதனை தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
unknown nodeமேலும், அந்த ஆட்டோ ஓட்டுனரிடம் நான் இந்த சம்பவம் குறித்து புகார் அளிக்கப்போவதாக கூறியபோது, ‘ புகார் அளியுங்கள்’ என ஆட்டோ ஓட்டுநர் கூறியதாகவும் பெண் பத்திரிகையாளர் குற்றம் சாட்டியுள்ளார்.
unknown nodeதற்போது இந்த சம்பவம் தொடர்பாக, ஆட்டோ ஓட்டுநர் வினோத் குமார் என்பவர் மீது, இந்திய தண்டனை பிரிவு 509 (ஒரு பெண்ணின் நாகரீகத்தை அவமதிக்கும் விதமாக வார்த்தை, சைகை அல்லது செயல் மூலம் நடந்து கொள்வது.) கீழ் டெல்லி காவல் துறை எப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளனர். குற்றம்சாட்டப்பட்ட அந்த ஆட்டோ ஓட்டுனரையும் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
@Uber I took an auto from my home to a friend’s place. After a while, I noticed that the driver was looking at me through the side mirrors of the auto, precisely at my breasts. I shifted a bit towards right and wasn’t visible in the left side mirror.
— Arfa Javaid (@javaidarfa_) March 1, 2023