காசோலை மோசடி வழக்கில் விசாரணைக்கு ஆஜராகாததால் நடிகை சரிதா நாயர் கைது!

Kozhikode: Actress Sarita Nair has been arrested by the Kozhikode police for appearing in a check fraud case.

காசோலை மோசடி வழக்கு விசாரணைக்கு ஆஜராக கூறி பலமுறை சம்மன் அனுப்பியும் ஆஜராகாத நடிகை சரிதா நாயர் கோழிக்கோடு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

காங்கிரஸ் ஆட்சி காலத்தில் கேரளாவில் சோலார் பேனல் மோசடி விவகாரத்தில் சிக்கியவர் தான் நடிகை சரிதா நாயர். முன்னாள் முதல்-மந்திரி உம்மன்சாண்டி அவர்கள் மீது பாலியல் புகார் கூறியதன் மூலம் அதிகம் வெளியில் பேசப்பட்டார். இந்த சோலார் மோசடி வழக்கில் சரிதா நாயர் உட்பட பலர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்கு விசாரணை பல ஆண்டுகளாக நடந்து வரும் நிலையில், விசாரணைக்கு ஆஜராகுமாறு சரிதா நாயருக்கு விசாரணை கோட் பலமுறை சம்மன் அனுப்பி உள்ளது.

ஆனால் விசாரணைக்கு ஆஜராகாமல் தொடர்ந்து மறுத்து வந்துள்ளார் சரிதாநாயர். இதனை அடுத்து இவருக்கு எதிராக கைது வாரணட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே, கோழிக்கோடு போலீசார் திருவனந்தபுரம் வந்து நேற்று காலை சரிதா நாயர் வீட்டிற்கு சென்று அவரை கைது செய்துள்ளனர். அவர் மட்டுமல்லாமல் அவருடன் சேர்ந்து அவரது வர்த்தக பங்குதாரர் பிஜு ராதாகிருஷ்ணன் மற்றும் டிரைவர் மணி ஆகியோரும் கைது செய்யப்பட்டு கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டுள்ளனர்.