புதிய உச்சத்தை தொட்டது பாதிப்பு.! ஒரே நாளில் 5242 பேருக்கு கொரோனா.! 157 பேர் பலி.!

இந்தியாவில் இதுவரை இல்லாத அளவுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 5,242 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கொரோனவால் அமைப்படுத்தப்பட்ட ஊரடங்கு நேற்றுடன் நிறைவடைய இருந்த நிலையில் மே 31 ஆம் தேதி வரை நீடிக்கப்படுகிறது என்று மத்திய அரசு அறிவித்தது. இதனைத்தொடர்ந்து அதற்கான புதிய வழிகாட்டி நெறிமுறைகளை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டது. அதில்., குறிப்பாக அத்தியாவசிய தேவை தவிர இரவு 7 மணிக்கு முதல் காலை 7 மணி வரை பொதுமக்கள் வெளியே வரக்கூடாது அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இருந்தாலும் கொரோனா பாதிப்பு குறையாமல் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இருப்பினும் அதன் விளைவு இரு மடங்காக உயர்ந்துகொண்டே செல்கிறது. இந்தியாவில் இதுவரை இல்லாத அளவுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 5,242 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல், கொரோனா பாதிப்பால் 157 பேர் பலியாகியுள்ளனர்.
இந்தியாவில் இதுவரை கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 96,169 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 36824 பேர் குணமடைந்துள்ள நிலையில், 3029 பேர் பலியாகியுள்ளனர். தற்போது நான்காவது கட்ட ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், கொரோனா பாதிப்பும், உயிரிழப்பும் புதிய உச்சத்தை தொட்டுள்ளது. இதனால் மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
ஐபிஎலில் விளையாடுவாரா சஞ்சு சாம்சன்? ஆள்காட்டி விரலில் அறுவை சிகிச்சை.! வெளியான தகவல்..,
February 12, 2025
INDvENG : புரட்டி எடுத்த சுப்மன் கில்..இங்கிலாந்துக்கு இந்தியா வைத்த பெரிய இலக்கு!
February 12, 2025
“பேத்தி வேண்டாம்.. பேரன் வேண்டும்” – நடிகர் சிரஞ்சீவியின் பேச்சால் வெடித்தது சர்ச்சை.!
February 12, 2025
பேருந்து விபத்தில் சிக்கி 7 பேர் காயம்,.. காரணத்தை விளக்கி ஓட்டுநரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவு!
February 12, 2025