அம்மாவும் மகனும் ஒரே அகாடமியில் ராணுவ பயிற்சி.. வெளியான நெகிழ்ச்சி புகைப்படம்.!

தனது தயார் ராணுவ பயிற்சி மேற்கொண்ட அதே பயிற்சி கூடத்தில் மகன் 27 வருடம் கழித்து பயிற்சி மேற்கொண்டார்.

தனது தயார் ராணுவ பயிற்சி மேற்கொண்ட அதே பயிற்சி கூடத்தில் மகன் 27 வருடம் கழித்து பயிற்சி மேற்கொண்டார்.

சென்னை ராணுவ பயிற்சி கூடத்தில் 1995ஆம் ஆண்டு ஸ்மிதா சதுர்வேதி என்பவர் பயிற்சி பெற்று வெளியேறி , தற்போது அவர் ஓய்வுபெற்ற மேஜராக இருக்கிறார்.

அதே போல , அவரது மகன் தற்போது சென்னை ராணுவ பயிற்சி கூடத்தில் பயிற்சி முடித்து ராணுவத்தில் பணியாற்ற உள்ளார்.இந்த புகைப்படங்களை பகிர்ந்த சென்னை, பாதுகாப்பு அமைச்சகத்தின் மக்கள் தொடர்பு டிவிட்டர் பதிவில்,

‘ பெண் அதிகாரிக்கு நெகிழ்ச்சிமிகு தருணம். மேஜர் ஸ்மிதா சதுர்வேதி (ஓய்வு), 1995ஆம் ஆண்டு பயிற்சி மேற்கொண்ட நிலையில், 27ஆண்டுகள் கழித்து அவரது மகன் அந்த ராணுவ பயிற்சியை முடித்துள்ளார்’ என பகிர்ந்துள்ளார்.

unknown node