டெல்லியில் உலக வர்த்தக மாநாட்டு நடைபெற்று வருகின்றது.இதில் பிரதமர் மோடி கலந்துகொண்டார்.
சுதந்திரத்திற்கு பின் பாஜக ஆட்சியில் தான் 7.4 விழுக்காடாக நாட்டின் வளர்ச்சி அதிகரித்துள்ளது .
டெல்லியில் நடைபெறும் உலக வர்த்தக மாநாட்டில் பங்கேற்று பேசிய பிரதமர் நரேந்திர மோடி தான் ஆட்சி பொறுப்புக்கு வரும்போது பிறகு விலைவாசி உயர்வு மக்களை திணற அடித்துக் கொண்டும் இருந்தது.கடந்த காலங்களில் அமைச்சர்களுக்கு இடையே யார் அதிக அளவில் ஊழல் செய்வது என்று போட்டி நிலவியதாகவும் மோடி குற்றம் சாட்டினார்.
மேலும் பேசிய அவர் தற்போது அரசு நிர்வாகம் வெளிப்படையாக இருப்பதாக மோடி பெருமிதம் தெரிவித்தார்.நாட்டின் வளர்ச்சி விகிதம் சுதந்திரத்திற்கு பின் பாஜக ஆட்சியில் தான் 7.4 விழுக்காடாக அதிகரித்துள்ளது. நாட்டின் பணவீக்கம் 4.5 விழுக்காடு இருப்பதாகவும் G.S.T போன்ற பொருளாதார சீர்திருத்தம் காரணமாக நாட்டின் வளர்ச்சி அதிகரித்து வருவதாக மோடி தெரிவித்தார்.