லண்டனில் இந்தியா தூதரகம் மீது தாக்குதல்.! இருநாட்டு பேச்சுவார்த்தையை நிறுத்தி மத்திய அரசு பதிலடி.!

லண்டனில் இந்தியா தூதரகம் மீது தாக்குதல் நடத்தபட்டது. அதற்க்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், வணிக வணிக ரீதியிலான இருநாட்டு பேச்சுவார்த்தையை மத்திய அரசு

லண்டனில் இந்தியா தூதரகம் மீது தாக்குதல் நடத்தபட்டது. அதற்க்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், வணிக வணிக ரீதியிலான இருநாட்டு பேச்சுவார்த்தையை மத்திய அரசு  நிறுத்தி வைத்துள்ளது.

பஞ்சாபில் உள்ள அம்ரித் பால் என்பவரை காவல்துறையினர் கைது செய்ய முனைப்பு காட்டி வருகின்றனர். இவர் காலிஸ்தான் பிரிவினைவாத முக்கிய நபர் ஆவர். இவரது  கைதுநடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் லண்டனில் இந்திய தூதரகத்தின் மீது தாக்குதல் நடத்தபட்டது.

இந்தியா கண்டனம் :

இந்த சம்பவத்திற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்தது.மேலும், இந்தியாவிலுள்ள இங்கிலாந்து தூதரக உயர் அதிகாரியை அழைத்து இந்தியா தனது கண்டனத்தை பதிவு செய்தது.

பேச்சுவார்த்தை நிறுத்தம் :

இருந்தும், இங்கிலாந்து அரசு இந்திய தூதரக தாக்குதல் குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது தொடர்பாக இங்கிலாந்து அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தக ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தையை மத்திய அரசு நிறுத்தி வைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மறைமுக எதிர்ப்பு :

இந்த பேச்சுவார்த்தை நிறுத்திவைக்கப்பட்டுள்ள நடவடிக்கையானது, இங்கிலாந்தில் இந்திய தூதரக அலுவலகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு மறைமுக எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இருப்பதாக கூறப்படுகிறது.