Union minister Amit shah - PM Modi - JP Nadda [File Image]
கடந்த நவம்பர் மாதம் நடைபெற்று முடிந்த 5 மாநில தேர்தலில் சத்தீஸ்கர், ராஜஸ்தான் , மத்திய பிரதேசம் என 3 மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்று ஆட்சியமைக்க உள்ளது. 5 மாநில தேர்தலில் ஒரே ஒரு மாநிலத்தில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சி தெலுங்கானா மாநில முதல்வர் யார் என உடனடியாக அறிவித்து நேற்று ரேவந்த் ரெட்டி தெலுங்கானா மாநில முதல்வராக பொறுப்பேற்று விட்டார்.
ஆனால் , 3 மாநில தேர்தலில் வெற்றி பெற்ற பாஜக இன்னும் ஒரு மாநிலத்தில் கூட மாநில முதல்வர் யார் என அறிவிக்காமல் இருந்து வருகிறது. சத்தீஸ்கர், ராஜஸ்தான் , மத்திய பிரதேசம் ஆகிய 3 மாநிலத்திலும் ஏற்கனவே முன்னாள் முதல்வராக இருந்த ராமன் சிங், வசுந்தரா ராஜே, சிவராஜ் சிங் சவுகான் அவர்களையே நியமிக்கலாமா அல்லது புதியவர்களை நியமிக்கலாமா என்ற யோசனையில் உள்ளது .
தேர்தல் வெற்றி.! மத்திய அமைச்சர்கள் ராஜினாமா.! அமைச்சரவையில் திடீர் மாற்றம்.!
சத்தீஸ்கர் மாநிலத்தில், இதுவரை 3 முறை முதல்வர் பொறுப்பில் இருத்துள்ள ராமன் சிங் முதலமைச்சர் ரேஸில் முன்னணியில் உள்ளார். அடுத்ததாக அம்மாநில முன்னாள் பாஜக தலைவர் விஷ்ணு தேவ் சாய் அவர்களும் உள்ளார். அடுத்து முக்கியமாக மத்திய அமைச்சராக இருந்து தனது பதவியை ராஜினாமா செய்து தான் வென்ற சர்குஜா மக்களவை தொகுதிக்குட்பட்ட 11 சட்டமன்ற தொகுதிகளிலும் பாஜக வெல்ல முக்கிய காரணமாக விளங்கியவர் ரேணுகா சிங். இவரும் சத்தீஸ்கர் மாநில முதலமைச்சர் ரேஸில் முக்கிய பங்கு வகிக்கிறார். நேற்று பாஜக தலைவர் ஜேபி நட்டாவுடன் ஆலோசனை நடத்தியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மத்திய பிரதேசத்தில் எந்த பிரச்னையும் இல்லை என்றே தெரிகிறது. ஏற்கனவே 4 முறை முதல்வராக பொறுப்பில் இருந்து இந்த முறை அதிக தொகுதிகளை பாஜக வெல்ல காரணமாக இருந்த சிவராஜ் சிங் சவுகான் தான் ம.பி முதல்வராக தேர்ந்தெடுக்கப்படுவார் என கூறப்படுகிறது. இருந்தும், மத்திய அமைச்சர் பிரஹலாத் படேல், மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர், கைலாஷ் விஜய்வர்கியா, ஜோதிராதித்ய சிந்தியா உள்ளிட்ட பலரும் முதல்வர் ரேஸில் உள்ளனர். ஆனால், இப்போதைய முதல்வர் சிவராஜ் சிங் சவுகானின் பெயர் போட்டியில் முன்னணியில் உள்ளது. அவருக்கு தற்போது வரை யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.
ராஜஸ்தான் மாநிலத்தில் 2 முறை முதல்வர் பொறுப்பில் இருந்த வசுந்தரா ராஜே பெயர் முன்னணியில் இருந்தாலும், அம்மாநில பாஜக தலைவர் சி.பி.ஜோஷியும் இந்த ரேஸில் முக்கிய பங்கு வகிக்கிறார். அதுமட்டுமில்லாமல், தியா குமாரி மற்றும் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் ஆகியோரும் முதல்வருக்கான போட்டியில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதன் காரணமாக தற்போது பாஜக சார்பில் 3 மாநில முதலமைச்சர்கள் யார் என தேர்ந்தெடுக்க பாஜக தலைமை பாஜக மேலிட பொறுப்பாளர்களை நியமித்துள்ளது. அதன்படி,
தேசிய பொதுச் செயலாளர் வினோத் தாவ்டே மற்றும் ராஜ்யசபா எம்.பி சரோஜ் பாண்டே ஆகியோர் ராஜஸ்தான் மாநிலத்திற்கு மேலிட பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர்.
ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார், டாக்டர் கே.லக்ஷ்மன், ஆஷா லக்ரா ஆகியோர் மத்தியப் பிரதேசத்திற்கு மேலிட பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர்.
மத்திய அமைச்சர்களான அர்ஜுன் முண்டா, சர்பானந்தா சோனோவால், துஷ்யந்த் குமார் கவுதம் ஆகியோர் சத்தீஸ்கர் மாநிலத்திற்கு மேலிட பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர்.
காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…
டெல்லி : ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…
மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…