பதவி விலகினார் அமேசான் நிறுவன தலைமை செயல் அதிகாரி…!

அமேசான் நிறுவன தலைமை செயல் அதிகாரி ஜெஃப் பெசோஸ் பதவி விலகினார்.
உலக அளவில் மிகவும் பிரபலமான நிறுவனம் அமேசான். 1994-ம் ஆண்டு மிகவும் எளிமையான முறையில் தொடங்கப்பட்ட இந்த அமேசான் நிறுவனமானது, தற்போது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதோடு, மிகவும் பிரபலமான நிறுவனமாகவும் காணப்படுகிறது.
அமேசான் நிறுவனத்தை நிறுவிய, அமேசான் நிறுவன தலைமை செயல் அதிகாரியான ஜெஃப் பெசோஸ் (57), பதவி விலக உள்ளதாக தகவல்கள் வெளியாகி வந்த நிலையில், தற்போது பதவி விலகலை அறிவித்துள்ளார். இவர் 20,180 கோடி டாலர் மதிப்புள்ள சொத்துக்கு சொந்தக்காரர் ஆவார். ஜெஃப் பெசோஸ் பதவி விலகியதையடுத்து, விண்வெளி நிறுவனமான ப்ளூ ஆரிஜின் உள்ளிட்ட பிற திட்டங்களுக்கு அதிக நேரம் செலவிடுவார் என கூறப்படுகிறது.
இதனையடுத்து, இந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக ஆண்டி ஜாஸ்ஸி நியமிக்கப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. ஜெஃப் பெசோஸ் 27 ஆண்டுகளில் 119 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள நிறுவனமாக அமேசான் நிறுவனத்தை மாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!
May 3, 2025