18,000 நோட்டுப் புத்தகங்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட அம்பேத்கர் உருவம்.! வைரலாகும் புகைப்படம்.!

இன்று சட்டமாமேதை அண்ணல் அம்பேத்கரின் 132-வது பிறந்தநாள், அம்பேத்கர் ஜெயந்தியாக கொண்டாடப்படுகிறது. அண்ணல் அம்பேத்கரின் பிறந்தநாளை முன்னிட்டு பல அரசியல் கட்சி

இன்று சட்டமாமேதை அண்ணல் அம்பேத்கரின் 132-வது பிறந்தநாள், அம்பேத்கர் ஜெயந்தியாக கொண்டாடப்படுகிறது. அண்ணல் அம்பேத்கரின் பிறந்தநாளை முன்னிட்டு பல அரசியல் கட்சி தலைவர்கள் அவரது சிலைக்கு மலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகிறார்கள்.

இந்நிலையில், மகாராஷ்டிராவின் லத்தூர் நகரில் உள்ள பூங்காவில் மொசைக் கலை பாணியில் 18,000 நோட்டுப் புத்தகங்களைக் கொண்டு அம்பேத்கரின்  ஒரு பெரிய உருவப்படம் ஒன்று பிரமாண்டமாக செய்யப்பட்டுள்ளது.

இதனை 18 கலைஞர்கள் இணைந்து, 11 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் இதை உருவாக்கினர். பின்னர் மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்கப்பட்டன. லத்தூரில் உள்ள  பாஜக எம்பி சுதாகர் தலைமையில் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 18,000 நோட்டுப் புத்தகங்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட அம்பேத்கரின் உருவப்படம் தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்

unknown node