பாஜக தலைவராக இருந்த அமித்ஷா இன்று உள்துறை அமைச்சராக பொறுப்பேற்றார்இரண்டாவது முறையாக பிரதமராக நரேந்திர மோடி பதவி ஏற்றார்.அதில் மோடி தலைமையிலான அமைச்சரவையில் 25 அமைச்சர்கள் , 24 இணையமைச்சர்கள், தனிப்பொறுப்புடன் கூடிய 9 அமைச்சர்கள் பதவியேற்றனர்.பின் மத்திய அமைச்சர்களுக்கான இலாக அறிவிக்கப்பட்டது.அதில் மத்திய உள்துறை அமைச்சராக அமித்ஷா நியமிக்கப்பட்டார்.
unknown nodeஇந்நிலையில் இன்று டெல்லியில் உள்ள அலுவலகத்திற்கு அமித்ஷா சென்றார்.அங்கு அவரை அலுவலக ஊழியர்கள் உள்ளிட்டோர் வரவேற்றனர். இதன் பின்னர் உள்துறை அமைச்சராக அமித்ஷா பொறுப்பேற்றார்.அவருடன் இணை அமைச்சர்களான நித்யானந்த் ராய்,கிஷன் ரெட்டி ஆகியோரும் பதவி ஏற்றனர்.